பழிவாங்கிய பின்னரே அமைதி பேச்சுவார்த்தை - உக்ரைன் அதிரடி அறிவிப்பு
ரஷ்யாவுடனான அமைதி பேச்சுவார்த்தை ஒகஸ்ட் மாத இறுதியில் தொடங்கலாம் என உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் டேவிட் அராஹமியா தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போரானது தற்போது கிழக்கு பகுதி நகரான செவரோடோனெட்ஸ்க்கில் ( severodonetsk) தீவரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், நகரை விட்டு பொதுமக்கள் வெளியேற உதவும் மூன்று தரைப் பாலங்களையும் ரஷ்ய படையினர் முழுவதுமாக தகர்த்துள்ளனர்.
அத்துடன் உக்ரைனின் கிழக்கு பகுதி நகரங்களை கைப்பற்றுவதிலும் ரஷ்ய படைகள் முன்னேறி வருகின்றனர். இந்தநிலையில், ரஷ்யாவிடனான அமைதி பேச்சுவார்த்தை ஒகஸ்ட் மாத இறுதியில் தொடங்கலாம் என உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் டேவிட் அராஹமியா தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பாக அமெரிக்க வானொலி நிறுவனத்திற்கு கருத்து வெளியிட்ட டேவிட் அராஹமியா,
பதிலடி தாக்குதல் நடத்துவோம்
உக்ரைன் பதிலடி தாக்குதல் நடத்திய பிறகு, ஒகஸ்ட் மாத இறுதியில் உக்ரைன் ரஷ்யா இடையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். இந்த கருத்தானது, போர் நிறுத்தம் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயார் என தெரிவித்ததை தொடர்ந்து வெளிவந்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான கடைசி அமைதி பேச்சுவார்த்தை துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புலில் மார்ச் 29ம் திகதி நடைபெற்றது, ஆனால் இந்த அமைதி பேச்சுவார்த்தையில் எத்தகைய மூடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.