உக்ரைனின் ஏவுகணை தாக்குதலால் திணறிய ரஷ்ய படைகள்! சர்வதேச போர் நிபுணர்களின் கணிப்பு வெளியானது
ரஷ்யா - உக்ரைன் போர் இன்றுடன் 20 ஆவது நாளாக தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றது.
ரஷ்யா தனது தாக்குதலை தற்போது தீவிரப்படுத்தியுள்ளதுடன், ஏவுகணைகள் மூலம் அதிகமாக தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில், நேற்று இரவு தலைநகர் கீவ் மற்றும் 2-வது பெரிய நகரமான கார்கிவ் நகரங்களில் ரஷ்யா பல முறை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்த இரு நகரங்களிலும் தற்போது முக்கிய தொழிற்சாலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுகின்றது.
இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் உக்ரைனின் விமான உற்பத்தி தொழிற்சாலையை ரஷ்ய படைகள் அழித்தன. கார்கிவ் நகரில் இரவு முழுவதும் தொடர்ச்சியாக ரஷ்ய போர் விமானங்கள் குண்டுகளை வீசியுள்ளதுடன், இரண்டு தடவை மிக சக்தி வாய்ந்த குண்டுகளும் வீசப்பட்டுள்ளதுடன்,இன்று அதிகாலையும் தலைநகர் கீவ்வில் 3 சக்தி வாய்ந்த குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
உக்ரைனுக்கு பல நாடுகள் மறைமுகமாக பீரங்கிகளையும், ஏவுகணைகளையும் கொடுத்து வருகின்றன. இதுவரை சுமார் 20 ஆயிரம் ஆயுதங்களை உக்ரைன் வெளிநாடுகளில் இருந்து பெற்று எதிர் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
குறிப்பாக சிறிய ரக ஏவுகணைகள் மூலம் ரஷ்ய படைகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த சிறிய ரக ஏவுகணைகள் ரஷ்ய படைகளை அதிகளவு அழித்துள்ளதுடன், இதனால் ரஷ்யா படைகள் திணறி வருவதாக சர்வதேச போர் நிபுணர்கள் கணித்துள்ளனர்.