பதுங்கு குழிகளை அமைத்து தற்காப்பை பலப்படுத்தும் ரஷ்ய படை
உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 29 நாளாக நீடித்து வரும் நிலையில், வான்வெளி, தரைவழி தாக்குதல் மட்டுமின்றி கடல் வழியாகவும் கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதன்போது ரஷ்ய படைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் எதிர்த்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், கீவ் நகரில் ரஷ்யப் படைகள் தனது வான் தாக்குதலை மீண்டும் கடுமையாக்கியுள்ளதுடன், அங்கு தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வரும் கீவ் புறநகர் பகுதியில் உள்ள மகாரிவ்வை ரஷ்யப் படையிடம் இருந்து உக்ரைன் மீட்டது. மேலும் மற்ற பகுதிகளை மீட்கவும் உக்ரைன் இராணுவம் கடுமையாக சண்டையிட்டு வருகின்றது.
இதையடுத்து கீவ் நகரில் ரஷ்யப் படைகள் தனது வான் தாக்குதலை மீண்டும் கடுமையாக்கி உள்ளதுடன், அங்கு தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டன.
இந்நிலையில், கீவ் நகரில் இருந்து 15 முதல் 20 கிலோ மீட்டர் தொலைவில் பதுங்கு குழிகளை ரஷ்ய படைகள் அமைத்துள்ளனர் என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கிவ் நகரை ரஷ்யா படையால் முன்னேற முடியவில்லை. கீவ்வின் கிழக்கு பகுதியில் ரஷ்ய படைகள் பின்வாங்கி உள்ளன. கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தன. தற்போது 55 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரஷ்ய படைகள் சென்றுவிட்டன.
ரஷ்ய படைகள் தங்களை பாதுகாத்து கொள்ள கிவ் புறநகர் பகுதிகளில் பதுங்கு குழிகளை அமைத்து உள்ளனர்” என்றும் தெரிவித்துள்ளார்.

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
