ரஷ்ய விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து போட்டிகளிலும் விளையாட தடை
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றது.
நேற்று முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இன்று ரஷ்யா ராக்கெட் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
கெர்சன், கார்கீவ், தலைநகர் கீவ் ஆகியவற்றின் மீது ரஷ்ய இராணுவம் தாக்குதலை அதிகரித்துள்ளது.
உக்ரைனை நோக்கி 64 கி.மீட்டர் தூரத்திற்கு ரஷ்ய இராணுவ வாகனம் அணிவகுத்து நிற்கின்றது.
இதனால் ரஷ்யா மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தும் என அஞ்சப்படுகின்றது.
இந்நிலையில், ரஷ்ய விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து போட்டிகளில் இருந்தும் தடை என உலக தடகள கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தடகள கூட்டமைப்பு இவ்வாறு அறிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்...
உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைக்காட்சி கோபுரம் மீது ஏவுகணை தாக்குதல்
உக்ரைனின் களமுனையில் நேட்டோவின் அதி சக்திவாய்ந்த ஆயுதங்கள்! வேகம் எடுக்கும் ரஷ்யா
கட்டடங்களை ‘X’ குறியீட்டினால் அடையாளப்படுத்தி வெடிகுண்டுகளால் தகர்த்தெறியும் ரஷ்யா
வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தும் ரஷ்யா! தரைமட்டமான உக்ரைனின் வரலாற்று சிறப்புமிக்க அரச கட்டடம்

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
