தீவிரமடைந்துவரும் போர்! கடுமையாக எச்சரிக்கை விடுத்த ரஷ்யா
ரஷ்யாவிற்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் தீர்க்கமான பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என்று அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மேற்கத்திய நாடுகளை எச்சரித்துள்ளார்.
ரஷ்ய வான்வெளியில் விமானங்களை சுட்டு வீழ்த்தும் முயற்சிகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்த அவர், ஜேர்மனி நிர்வாகம் இராணுவத்தைப் போன்று பேசுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
போர் தீவிரம்
உக்ரைனில் ரஷ்யாவின் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சமீபத்திய வாரங்களில் நேட்டோவின் கிழக்குப் பகுதியில் பதட்டங்கள் அதிகரித்துள்ளன.
ரஷ்யா தங்களது வான்வெளிக்குள் மூன்று போர் விமானங்களை அனுப்பியதாக எஸ்டோனியா தெரிவித்துள்ளது. நேட்டோ போர் விமானங்கள் போலந்து மீது ரஷ்ய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளது.
இந்த நிலையிலேயே, ரஷ்யா மீதான அச்சுறுத்தலுக்கு உரிய பதிலடி உறுதி என லாவ்ரோவ் எச்சரித்துள்ளார்.
எச்சரித்த ரஷ்யா
ரஷ்யாவுடன் தொடர்புடைய தொடர்ச்சியான ட்ரோன் ஊடுருவல்கள் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளை பதட்டப்படுத்தியுள்ளன, அங்கு பனிப்போர் முடிந்ததிலிருந்து ரஷ்யா மிகப்பெரிய அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில், அத்துமீறும் ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்தும் முடிவிற்கு ஆதரவளிப்பதாக ஜனாதிபதி ட்ரம்பும் அறிவித்துள்ளார்.
ஆனால், ட்ரம்பின் பேச்சை புறந்தள்ளிய லாவ்ரோவ், ரஷ்யாவிற்குள் விமானங்களை சுட்டு வீழ்த்தும் முடிவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



