கரூரில் விஜயின் பரப்புரைக்கு நேர்ந்த கதி! இருட்டில் நடந்த இரகசிய திட்டம்..
நேற்றையதினம்(27) தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கரூருக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு தரப்பினர் விஜயை குற்றஞ்சாட்டும் அதேவேளை மற்றுமொரு தரப்பினர் ஆளும் கட்சி சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கவில்லை என கூறி வருகின்ற நிலையில், சட்டஒழுங்கை ஒழுங்காக கடைப்பிடிக்காத நிலையிலே இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தமிழகத்தின் ஊடகங்கள் ஏதோவொரு பக்கசார்புடன் கருத்துக்களை வெளியிடுவதை காணக்கூடியதாக உள்ளது. விஜயின் எழுச்சியை கண்டு பயப்படுகிறார்கள்.
தமிழகத்தின் அரசியலை யாராலும் கணிக்க முடியாது.எனவே இந்த விடயம் சதிதிட்டமாக இருக்கலாம்.
மக்களின் கருத்துக்களை கேட்கும் போது விஜய்க்கு மூட்டி தீ எதிரிகளை சுட்டதாகவே பார்க்கப்படுகின்றது.
இனி அவரின் கூட்டங்களை நடத்தவிடாவிட்டால் அதுவும் விஜயின் எதிரிகளுக்கு எதிர்ப்புக்களை உண்டாக்கும்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி...



