உக்ரைனுக்கு பயணிக்கும் நான்கு நாடுகளின் தலைவர்கள். ஜெர்மன் ஜனாதிபதியின் வருகை ரத்து(Video)
போலந்து, லிதுவேனியா, லத்திவியா மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகள், உக்ரைனியப் பிரதிநிதியான வோலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கியேவ் நகருக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தை உக்ரைனுக்கான "ஆதரவின் சைகை" என்று ஜனாதிபதி ஸெலென்ஸ்கி வர்ணித்துள்ளார்.
இவர்களின் பயணத்தின்போது உக்ரைனிய குடிமக்கள் மற்றும் இராணுவத்திற்கு உதவுவதற்கான வழிகள் குறித்து கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஏற்கனவே இந்த குழுவில் இடம்பெறுவதாக இருந்த ஜேர்மன் ஜனாதிபதி ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் தமது பணயத்தை இறுதி நேரத்தில் ரத்துச்செய்துள்ளார்.
ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சராக இருந்த காலத்தில் அவர் ரஷ்யாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தமைக்கான விமர்சனங்களுக்கு மத்தியில், அவரின் பயணத்தை உக்ரைன் விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் உக்ரைனுக்கு வருகை தருவார் என்று தாம் எதிர்பார்த்ததாக ஜனாதிபதி ஸெலென்ஸ்கியின் உதவியாளர் கூறியுள்ளார்
இது இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் உக்ரைன் பயணம்