யாழில் நீதிபதி அலெக்ஸ்ராஜாவுக்கு நேர்ந்தது என்ன! அவிழ்க்கப்படும் அதிர்ச்சி தகவல்கள்
யாழ்ப்பாண உயர் நீதிமன்றத்திலிருந்து பதுளை சிவில் மேன்முறையீட்டு உயர் நீதிமன்றத்துக்கு ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா இடமாற்றம் செய்யப்பட்டமை குறித்து கடும் விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.
அலெக்ஸ்ராஜா, கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், பதவியேற்ற ஒரு மாதத்துக்குள் அவர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது, அந்த இடமாற்றத்துக்குப் பின்னால் புறக்காரணங்கள் இருக்கலாம் என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளது என யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்திருந்தது.
மேலும், அலெக்ஸ்ராஜாவின் இடமாற்றத்துக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இதற்கிடையில், யாழ்ப்பாண மேல் நீதிமன்றின் நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.
இவ்விடயம் குறித்த முக்கிய விடயங்களை ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,