10 கோடி ரூபாவிற்கும் மேற்பட்ட பணத்துடன் மாயமான தமிழ் வர்த்தகர்
வவுனியாவில் 10 கோடி ரூபாவிற்கும் மேற்பட்ட பணத்துடன் வர்த்தகர் ஒருவர் குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா - குட்செட்வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் வசித்து வந்த, நகைக் கடை ஒன்றை நடத்தி வந்த வர்த்தகரே 10 கோடி ரூபாவிற்கும் மேற்பட்ட பணத்தை பல வர்த்தகர்களிடம் கடனாகப் பெற்றுக் கொண்டு குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
அதிரடியாக கைது செய்யப்பட்ட டுபாய் சுத்தா! பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டிருந்தால் உடன் அறிவிக்கவும் - முக்கிய அறிவுறுத்தல்
பொலிஸார் விசாரணை
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நகைக் கடை உரிமையாளர் ஒருவர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த வர்த்தகர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தப்பிச்சென்ற வர்த்தகர் நபர் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக வவுனியாவில் பல நகைக் கடைகளுக்கு நகைகளை விநியோகம் செய்து வந்ததுடன், நகைக் கடைகளுடன் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்திருந்தார்.

இவர் தொடர்பில் தகவல் தெரிந்தோர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிசாருக்கு தகவல் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.