நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் மதகுருக்களின் செயல்கள்.. அடுத்தடுத்து பதிவாகும் சிறுவர் துர்நடத்தைகள்
நாட்டில் அண்மைக்காலமாக சிறுவர் துஸ்பிரயோகங்களும் பாலியல் வன்புணர்வுகளும் அதிகரித்து வருகின்றன.
சமீபத்தில், அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி தேரர் சிறுமி ஒருவரை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இவ்விடயம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று கண்டியில் 15 வயதுடைய சிறுமியை பாலியல் ரீதியான துர்நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பௌத்த பிக்கு ஒருவரும், அதற்கு உடந்தையாக இருந்த பெண் ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
அதேநரம், 14 வயது சிறுமியை பாலியல் ரீதியான துர்நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மௌலவி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், 2012ஆம் ஆண்டு சிறுவன் ஒருவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்ட 74 வயது நபருக்கு இன்று குற்றவாளி என அறிவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவ்வாறு அதிகரித்து வரும் சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு மத்தியில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கேள்வி மனவேதனை அளிப்பதாக மாறியுள்ளது.
இவ்வழக்குகள் தொடர்பில் முக்கிய விடயங்களை ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி,