அமெரிக்கா - ஈரான் பரஸ்பர வான்வழித் தாக்குதல்: குவைத் வான் பாதுகாப்புப் படை தீவிர நடவடிக்கை
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பர புதிய வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்து வரும் நிலையில், குவைத் நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அந்நாட்டு அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது.
'ஈரானின் கொடூரமான தாக்குதல்' என்று குவைத் வெளியுறவு அமைச்சகம் வர்ணித்துள்ள இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, அந்நாடு தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை உடனடியாகச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது.
சீன நிறுவனங்களின் வெளிநாட்டு கிளைகளுக்கும் தடை: ஏஐ சிப் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் அமெரிக்கா
பெரும் பதற்றம்..
இதற்கிடையில், ஈரான் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அமெரிக்காவின் இராணுவத் தளமே பயன்படுத்தப்பட்டதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே, குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெஹ்ரான் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே தீவிரமடைந்து வரும் இந்த மோதல் போக்கு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்கள் தான்.. முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam