இரவோடு இரவாக போரில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கையை மறைக்க போராடும் ரஷ்யா (VIDEO)
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இராணுவத் தாக்குதலை தொடங்கிய நிலையில், தொடர்ந்து 4 வாரங்களுக்கும் மேலாக அங்கு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்றது.
உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால், உக்ரைன் - ரஷ்ய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகின்றது.
இந்நிலையில், உக்ரைன் படையினரின் கடும் எதிர்தாக்குதலால் ரஷ்ய படையினர் நாளாந்தம் பெருமளவில் கொல்லப்படுவதுடன் படை தளபாடங்களும் பெருமளவில் அழிக்கப்படுகின்றன.
There are so many dead & wounded Russian soldiers in Homel region, Belarus, that they've started loading corpses on trains at night "so as not to attract attention." 2,500 KIA sent back to Russia, hospital staff say. That's 5x the official number https://t.co/hhuiJG5j2C pic.twitter.com/SKeX5oaEPh
— Alec Luhn (@ASLuhn) March 19, 2022
உக்ரைனில் கொல்லப்படும் ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கையை மறைக்க இரவு நேரங்களில் அவர்களது சடலங்களை ஏற்றிய விமானங்கள்,ரயில்கள் மற்றும் அம்புலன்ஸ்கள் அண்டை நாடான பெலாரஸ்க்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
மார்ச் 13 வரை 2,500-க்கும் மேற்பட்ட வீரர்களின் சடலங்கள் Homel-ல் இருந்து ரஷ்யாவிற்கு ரயில்கள் அல்லது விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, உக்ரைன் படையெடுப்பில் தமது தப்பில் 500 இற்கும் குறைவான படையினரே உயிரிழந்ததாக ரஷ்யா தெரிவித்து வரும் நிலையில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய படையினரை தாம் கொன்று குவித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.