அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராகும் ரஷ்யா - ஜப்பான் வெளியிட்ட தகவல்
ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளதென ஜப்பான் பிரதமர் Fumio Kishida தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதங்களால் தாக்கப்பட்ட ஒரே நாடான ஜப்பான், அணு ஆயுதங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
ஜப்பானிய பிரதமர் Fumio Kishida தனது சொந்த ஊரான ஹிரோஷிமாவில் அணு ஆயுத தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்த அமெரிக்க தூதரை அழைத்துச் சென்ற போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. உலகின் அணுவாயுத தாக்குதலுக்குள்ளான நாடாக ஜப்பான் உள்ள நிலையில், தான் இதனை உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த துயரமான நிலைமை மீண்டும் ஏற்பட கூடாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைன் மீதான போரில் உயிரியல், இரசாயன அல்லது அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஏழு நாடுகளின் குழுவின் தலைவர்கள் வியாழக்கிழமை ரஷ்யாவை வலியுறுத்தினர்.
எனினும் தங்களுக்கு ஆபத்தாக உள்ள நாடுகளுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
