உக்ரைனுடனான போரை வலுப்படுத்த்த புடின் புதிய நகர்வு!
உக்ரைனுடனான போரை வலுப்படுத்த்தும் நோக்கில் மேம்பட்ட செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை வடகொரியாவுடன் பகிர்ந்து கொள்வதற்கு, ரஷ்யா நெருக்கம் காட்டி வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
இதனை அமெரிக்கா கடுமையாக எச்சரிப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்(Antony Blinken) குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 'வடகொரியா இராணுவத்திறனர் ஏற்கனவே ரஷ்ய இராணுவ உபகரணங்களையும் பயிற்சியையும் பெற்று வருகின்றனர்.
செயற்கைக்கோள் தொழில்நுட்பம்
இப்போது, முன்கூட்டியே வடகொரியாவுடன் ரஷ்யா விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக எங்களால் அறிய முடிகிறது" என பிளிங்கன் கூறியுள்ளார்.
கொரிய தீபகற்பத்தை அணுவாயுத சேமிப்பகமாக மற்ற அதன் பல தசாப்த கால உறுதிப்பாட்டை மாற்றியமைக்கும் வகையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கு நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் புடின் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடன் ஒரு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார்.
இந்த ஒப்பந்தம் தொடர்பில் அமெரிக்க கடும் அதிருப்திகளை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |