யுக்ரைன் நகர் மீது ரஷ்யா தீவிர வான்வழித் தாக்குதல்: 17 பேர் பலி
தெற்கு உக்ரைனின் ஜபோரிஜியா நகரின் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 சிறுவர்கள் கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யா மீது விதித்திருந்த டீசல் ஏற்றுமதித் தடைகளை நீக்குவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த அடுத்த ஒரே நாளில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜபோரிஜியாவில் உள்ள குடியிருப்பு கட்டடங்கள் மீது ரஷ்யா வீசிய 'கிளைட் பாம்' (Glide bombs) தாக்குதலில் பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதில் 6 வயதுச் சிறுமி உட்பட 17 பேர் பலியாகியுள்ளதுடன் 18க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஈரானுடனான மோதல்
இந்த நிலையில்,அமெரிக்கா ரஷ்யா மீதான டீசல் தடைகளை நீக்கியதன் விளைவாகவே ரஷ்யா ஊக்கம் பெற்று இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக, மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், ஈரானுடனான மோதல் சூழலைச் சமாளிக்கவும் ரஷ்ய டீசல் மீதான தடைகளை ட்ரம்ப் நிர்வாகம் நீக்கியுள்ளது.