ஈரானின் நிலைப்பாட்டை ட்ரம்பிற்கு அறிவித்த புடின்
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர் சூழலை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து, ஈரானின் நிலைப்பாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
இதனை ரஷ்ய அரசு மாளிகையான கிரம்ளின் அறிவித்துள்ளதாக சர்வதேச செய்தி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
டீசல் மீதான தடை
ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசஷ்கியனுடன் கலந்தாலோசித்து, இந்த சமாதான தீர்வுக்கான ஈரானின் பார்வையை புடின், ட்ரம்ப்பிடம் அறிவித்துள்ளதாக , கிரம்ளின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

இந்த தொலைபேசி உரையாடலின் போது, உலக சந்தையில் உயர்ந்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த ரஷ்யா மில்லியன் கணக்கான டன் டீசலை வழங்க ஒப்புக்கொண்டதாகவும், அதனைத் தொடர்ந்து அமெரிக்கா சில ரஷ்ய டீசல் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.