2026இற்கான நோபல் பரிசை பெற்ற தமிழ் வம்சாவளிப் பெண்.. ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை
2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இந்திய, தமிழ் வம்சாவளியினரான நவி பிள்ளை என்னும் நவநீதம் பிள்ளைக்கு வழங்கப்பட்டுள்ளது.
நவி பிள்ளை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) முன்னாள் நீதிபதியாவார்.
இந்நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் நிர்வாகம் அந்த நீதிமன்றத்தின் மீது கடுமையான தடைகளை விதித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, தனிப்பட்ட நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை மட்டும் குறிவைக்காமல், நீதிமன்றத்தையே இலக்காகக் கொண்டு நேற்று இந்தத் தடைகளை அறிவித்தார்.
கடுமையான தடைகள்..
இது, சர்வதேச தீர்ப்பாயத்துடனான வாஷிங்டனின் மோதலில் ஒரு பெரும் தீவிரமயமாக்கலைக் குறிக்கிறது.

இந்த நடவடிக்கைகள், அமெரிக்க நிறுவனங்களால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) வழங்கப்படும் நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் சேவைகளைக் கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது நீதிமன்றத்தின் வங்கி, காப்பீடு மற்றும் தொழில்நுட்பச் செயல்பாடுகளைப் பாதிக்கக்கூடும். இந்நிலையில், அமெரிக்கக் குடிமக்களை நீதிமன்றம் வழக்குத் தொடர அனுமதிக்காது என்று ரூபியோ கூறினார்.
மேலும், அந்தத் தீர்ப்பாயம் குறித்த அமெரிக்காவின் கவலைகளைத் தீர்க்குமாறு வொஷிங்டனின் நட்பு நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடல் பகுதியில் நங்கூரமிட்டுள்ள ஈரானியக் கப்பல்கள்: அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதா..! சிக்கலில் இலங்கை