கைவிடப்பட்ட நிலையில் மகிந்த - விலகிச் செல்லும் பிரபலங்கள் - ஏமாற்றத்தில் ராஜபக்ச குடும்பம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஓரங்கட்டப்படுவதாக, அண்மையில் நடைபெற்ற இறுதிச்சடங்கு நிகழ்வு வெளிப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ராஜபக்ச குடும்பத்தின் மூத்த புதல்வரான சாமல் ராஜபக்சவின் மனைவியின் இறுதிக் கிரியைகள் கடந்த 18ஆம் திகதி நடைபெற்றது. அன்றையதினம் மகிந்த ராஜபக்சவின் பிறந்த தினமாகும்.
மகிந்தவினால் மிகவும் மதிக்கப்படும் பெண்மணியாக சாமல் ராஜபக்சவின் மனைவி சந்திரா ராஜபக்ச இருந்துள்ளார். இதன் காரணமாக மகிந்தவின் பிறந்த தினத்தை ஆர்ப்பாட்டங்கள் இன்றி சாதாரணமான முறையில் கொண்டாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதான அரசியல் தலைவர்கள்
இந்நிலையில் சந்திரா அம்மையாரின் இறுதிக்கிரியை நிகழ்வின் போது, பிரதான அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக தற்போது அரசியல் நெருக்கடிகளை கருத்திற் கொண்டு அவர் ஓரங்கட்டப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோர் அனுதாபச் செய்திகளை அனுப்பியிருந்தனர்.
பொதுஜன பெரமுன கட்சியினரைத் தவிர, நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திஸாநாயக்க, மகிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண உள்ளிட்ட சிலரும் அங்கு வந்திருந்தனர்.
முன்னாள் சபாநாயகரின் மனைவியின் இறுதிக்கிரியையில் பிரதான அரசியல் பிரபலங்கள் கலந்து கொள்ளாமை தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் பேசப்படுகிறது.
பிறந்த நாள் கொண்டாட்டம்
இதேவேளை, மகிந்தவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் நாமல் ராஜபக்ச பங்கேற்க முடியவில்லை என குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு வரவு-செலவுத் திட்ட விவாதங்களுக்காகத் தொடர்ச்சியாக நாடாளுமன்றம் வருவதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதால் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களை அடிக்கடி சந்திக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
எனினும் நாமல் ராஜபக்சவினால் நவம்பர் 18 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் 81 ஆவது பிறந்தநாளை கொண்டாட முடியாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this video
அறிமுகப் போட்டியிலேயே 4 பந்தில் 4 விக்கெட் - கிரிக்கெட்டுக்காக வீட்டைவிட்டு வெளியேறிய ஜம்ஷெட் ஆலம் News Lankasri