தேவாலய ஆராதனையின்போது அதிரடியாகக் கைது செய்யப்பட்ட மதபோதகர் யூபர்ட் ஏஞ்சல்
சிம்பாப்வேயின் பிரபல மதபோதகரும், தேவாலயத்தின் நிறுவனருமான யூபர்ட் ஏஞ்சல், தவறான நடத்தையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கைது நடவடிக்கை நேற்றுமுன்தினம் (22.11.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவராகவும் யூபர்ட் ஏஞ்சல் அறியப்படுகிறார்.
ஆராதனையில் அதிரடி கைது
சிம்பாப்வே பொலிஸ் திணைக்களம், சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம் அவரது கைது தொடர்பான தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆராதனை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யூபர்ட் ஏஞ்சல், சிம்பாப்வேயின் முக்கிய மதப் பிரமுகர்களில் ஒருவராகவும், அந்நாட்டு ஜனாதிபதியின் விசேட தூதுவராகவும் அறியப்படுகிறார்.
எனினும், குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்கள் யார், சம்பவங்கள் எப்போது இடம்பெற்றன, அவர் எப்போது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்பது தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.