ஓராண்டில் அரசாங்கம் வீடு செல்ல நேரிடும் - அர்ச்சுனா எச்சரிக்கை
அரசாங்கம் உரிய முறையில் ஆட்சி செய்யத் தவறினால் ஓராண்டு காலப்ப குதியில் வீடு செல்ல நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு அறிவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார். இன்றையதினம்(23.11.2026) நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு அதிகாரம் காணப்பட்ட போதிலும் அறிவாற்றல் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாமல் ராஜபக்ச, சாமர சம்பத் மற்றும் என்னை சிறையில் அடைப்பதாக எவ்வளவு காலம் பிரசாரம் செய்ய முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சாப்பிடுவதையே சிலர் தொழிலாகக் கொண்டு
நாமலையும், சாமரவையும் கைது செய்து சிறையில் அடைப்பதன் மூலம் மக்களின் வயிறு நிரம்பி விடுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் குரல் கொடுத்துக் கொண்டிருந்த சாமர சம்பத்திற்கு எதிராக இல்லாத பொல்லாத வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாமல் ராஜபக்சவிற்கு எதிராக ட்ரயல் எட் பார் முறையில் நீதிமன்ற விசாரணை நடத்தப்பட முடியுமாயின் ஏன் பிமல் ரட்நாயக்க மற்றும் குமார ஜயக்கொடி ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடரப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எயார்பஸ் விவகாரத்தில் பணம் பெற்றுக்கொண்டவரும் பணத்தை கொடுத்தரும் வெளியில் இருப்பதாகவும், சாட்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களுக்கு வாழ முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள், பொறியியலாளர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதகாக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றிற்கு தெரிவான போது உடல் மெலிந்திருந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் தற்பொழுது தொப்பை பெருத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றிற்கு வந்து சாப்பிடுவதையே சிலர் தொழிலாகக் கொண்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். வாழ்நாளில் கோட் மற்றும் காலணி அணியாதவர்கள் தற்பொழுது அவற்றை அணிவதாகவும் அது குறித்து மகிழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவிதமாக ஆட்சி செய்தால் இந்த அரசாங்கம் ஓராண்டில் வீடு செல்ல நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகளின் தலைவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு! சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்