ரியாத் விமான நிலையத்தில் பலத்த வெடிப்புச் சத்தம்! விரைந்து செல்லும் நோயாளர் காவுவண்டிகள்
சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் இன்று( பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, அந்த பகுதியிலிருந்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், 12 க்கும் மேற்பட்ட நோயாளர் காவுவண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
யேமனின் ஈரானிய ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சிகளினால் சவூதி மீது மேற்கொள்ளப்பட்டு வரும் ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல்கள்
இந்த வாரத்தில் மட்டும் இந்தச் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து இருமுறை தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 4 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்ததுடன் விமானம் ஒன்றும் கடுமையாகச் சேதமடைந்திருந்தது.

இந்தச் சம்பவம் குறித்துச் சவூதி அரசின் ஊடக அலுவலகமோ அல்லது சவூதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையோ உடனடியாக எவ்விதக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.
விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் 'Flightradar24' வலைத்தளத்தின் தரவுகளின்படி, ரியாத்தை நோக்கிய அனைத்து விமானங்களும் மாற்றுப் பாதைகளுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் விமான நிலையத்திற்கு மேல் ஒரு உலங்குவானூர்தி மட்டுமே வட்டமிட்டுக்கொண்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.