உக்ரைன் மீது சக்தி வாய்ந்த வேக்யூம் குண்டு வீசி ரஷ்யா தாக்குதல்
உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 6 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
இந்நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய இராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது.
குறிப்பாக, அரசு கட்டடங்கள், இராணுவ நிலையங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில்,உக்ரைனின் ஒக்த்ரைகா நகர் மீது மிகவும் சக்தி வாய்ந்த வேக்யூம் குண்டினை ரஷ்யா வீசியுள்ளதாகவும், சக்திவாய்ந்த வேக்யூம் குண்டு காற்றில் உள்ள ஆக்சிஜனை எரிபொருளாக பயன்படுத்தி வெடிக்க வைக்கப்படுவதாகவும், அமெரிக்காவிற்கான உக்ரைன் தூதுவர் கூறியுள்ளார்.
குண்டு வீசும் பகுதிகளில் உள்ள ஆக்சிஜன் வெடிபொருளுடன் கலந்து வெடிக்கும் போது, சாதாரண குண்டுகளை விட அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தி பெரும் சேதத்தை உண்டாக்கும் எனவும், ஜெனீவா உடன்படிக்கைகளின்படி தடை செய்யப்பட்ட வேக்யூம் குண்டுகளை உக்ரைன் மீது ரஷ்யா வீசியதாக அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதர் மார்க்ரோவே கூறியுள்ளார்.
இதன்போது குண்டு வீச்சினால் ஏராளமான உக்ரைன் இராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை, வேக்யூம் குண்டை பயன்படுத்துவது போர்க்குற்றம் என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்..
உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைக்காட்சி கோபுரம் மீது ஏவுகணை தாக்குதல்
உக்ரைனின் களமுனையில் நேட்டோவின் அதி சக்திவாய்ந்த ஆயுதங்கள்! வேகம் எடுக்கும் ரஷ்யா
உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைக்காட்சி கோபுரம் மீது ஏவுகணை தாக்குதல்

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
