உக்ரைனின் முக்கிய நகரை கைப்பற்றிய ரஷ்யா
கிழக்கு மாகாணமான லுஹான்ஸ்கில் உக்ரைனின் கடைசி கோட்டையான லிசிசான்ஸ்க் முழுவதையும் கைப்பற்றியதாக ரஷ்யா கூறுகிறது. எனினும், இதனை உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் நிராகரித்துள்ளது.
இந்த முக்கிய நகரத்தில் சண்டை இப்போது சிறிது காலமாக மிகவும் தீவிரமாக இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
ரஷ்ய படைகள் லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பிராந்தியங்களின் கட்டுப்பாட்டை ஒருங்கிணைக்க முயல்வதால், உக்ரேனில் போர் சமீபத்திய வாரங்களில் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கில் கவனம் செலுத்துகிறது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம், நகரம் விடுதலை செய்யப்பட்டுள்ளது என்றும் மொஸ்கோ முழு கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
விளைவுகளில் எதையும் நான் நிராகரிக்கவில்லை
லுஹான்ஸ்க் போராளிகள் தெருக்களில் அணிவகுத்துச் செல்வது, கொடிகளை அசைத்து ஆரவாரம் செய்வது போன்ற காட்சிகளை ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஆனால் கிழக்கு உக்ரைன் நகரம் ரஷ்ய துருப்புக்களின் முழு கட்டுப்பாட்டில் இல்லை என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
சிவர்ஸ்கி டோனெட்ஸ் ஆற்றின் எதிர்புறத்தில் உள்ள லிசிசான்ஸ்கின் துணை நகரமான செவெரோடோனெட்ஸ்க்கை ரஷ்ய துருப்புக்கள் கைப்பற்றிய சில நாட்களுக்குப் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் ஒலெக்ஸி அரெஸ்டோவிச், ரஷ்ய வீரர்கள் ஆற்றைக் கடந்து வடக்கிலிருந்து லிசிசான்ஸ்க் நோக்கி வருவதாக முன்னர் கூறினார். இது உண்மையில் ஒரு அச்சுறுத்தல், அதனை நாம் பார்த்துக்கொள்வோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்குள்ள விளைவுகளில் எதையும் நான் நிராகரிக்கவில்லை.
ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் விடயங்கள் மிகவும் தெளிவாகிவிடும் என அவர் மேலும் கூறியுள்ளார்.