டித்வாவில் பாதிக்கப்பட்டதாக மோசடியில் ஈடுபட்ட முன்னாள் பிரதி சபாநாயகர்
முன்னாள் பிரதி சபாநாயகர் ஒருவர், எந்தவித தகுதியும் இல்லாமல் 'டித்வா' சூறாவளி இழப்பீடாக இரண்டு இலட்சம் ரூபா (200,000) பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் நேற்று (29.01.2026) நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார தலைமையில் நடைபெற்ற இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இது தெரியவந்தது.
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அம்பலம்
'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறு வர்த்தக உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது. அச்சந்தர்ப்பத்தில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத சிறு வர்த்தக உரிமையாளருக்கு இரண்டு இலட்சம் ரூபா (200,000) இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறு வர்த்தக உரிமையாளர்கள் நஷ்ட ஈடு கோரி விண்ணப்பங்கள் சமர்ப்பித்திருந்த போது எவ்வித பரிசோதனைகளும் செய்யாமல் இது வழங்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் தேடிபார்த்ததில், முன்னாள் பிரதி சபாநாயகர் உட்பட பல சிறு வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதாக இரத்தினபுரி மாவட்ட சிறு வர்த்தக மேம்பாட்டு இயக்குநர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் நேரில் ஆய்வு செய்யவில்லை என்றும், கொலொன்ன பிரதேச அலுவலகம் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் பணம் செலுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri
Siragadikka Aasai: முத்துவின் சட்டையைப் பிடித்து அடித்த ரவி... அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட விரிசல் Manithan