ரணிலின் மற்றுமொரு மோசடி: அரசு கையகப்படுத்திய ஐந்து ஏக்கர் காணி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மோசடியாக வழங்கிய ஐந்து ஏக்கர் காணியை அரசு திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழுள்ள விகாரகல தோட்டத்திற்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் காணியை, விடுமுறை விடுதி கட்டுவதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு (GMOA) குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
மீறப்பட்டுள்ள சட்டங்கள்
இந்த காணி உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாமல் கைமாற்றப்பட்டுள்ளது.மேலும் குத்தகை நிபந்தனைகளும் மீறப்பட்டதால், காணியை மீள கையகப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் காணி (24.05.2023) அன்று குத்தகை பத்திரம் மூலம் 30 வருட காலத்திற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

ஏக்கருக்கு சுமார் (50,000) ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பீட்டில் குத்தகைக்கு விடப்பட்ட இந்தக் காணி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குத்தகை விதிமுறைகளை பூர்த்திச் செய்யத் தவறியதால், சமீபத்தில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த காணி அமைந்துள்ள பகுதி, தியலும நீர்வீழ்ச்சி உட்பட பல முக்கிய சுற்றுலா தலங்களுக்கு அருகில் அமைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri