புடின் மிகவும் ஆபத்தானவராக மாறக்கூடும் - சர்வதேச ஊடகம் தகவல்
நேட்டோ உச்சிமாநாட்டிற்குப் பிறகு புடின் மிகவும் ஆபத்தானவராக மாறக்கூடும் என ஸ்கை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், நேட்டோ பல தசாப்தங்களில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று ஸ்கையின் சர்வதேச விவகாரங்களின் ஆசிரியர் டொமினிக் வாகோர்ன் தெரிவித்துள்ளார்.
நேட்டோ விரிவாக்கம் மற்றும் இந்த வாரம் கூட்டணியின் உச்சிமாநாட்டில் அறிவிக்கப்பட்ட மாற்றங்கள், கிழக்கு ஐரோப்பாவில் ஆயிரக்கணக்கான கூடுதல் துருப்புக்களை நிலைநிறுத்துவது உட்பட, விளாடிமிர் புடினின் மோசமான அச்சங்கள் நிறைவேற்றப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல வருடங்கள் புடினுக்கு சந்தேகத்தின் பலனைக் கொடுத்த பிறகு, நேட்டோ தலைவர்கள் வலிமையும் உறுதியும்தான் புதிதாக போரிடும் ரஷ்யாவைக் கட்டுப்படுத்த சிறந்த வழி என்று நம்புகிறார்கள் என அவர் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.
நேட்டோவின் புதிய நிலைப்பாடு அவசியமாக இருக்கலாம் ஆனால் அது தற்போதைய சூழ்நிலையை குறைவான ஆபத்தானதாக மாற்றாது. ஐரோப்பா வழியாக ஒரு புதிய இரும்புத் திரை இறங்குகிறது.
ஜனநாயக மேற்குக்கும் எதேச்சதிகார கிழக்கிற்கும் இடையிலான இடைவெளி ஆழமடைந்து வருகிறது அவர் குறிப்பிட்டுள்ளார்.
21 சடலங்கள் மீட்பு
இதேவேளை, அண்மையில் உக்ரைன் மத்திய நகரில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து தற்போது 21 சடலங்கள் வணிக வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரேனிய நகரமான கிரெமென்சுக்கில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலின் இடிபாடுகளில் இருந்து டஜன் கணக்கான உடல் துண்டுகளை"அவசரகால பணியாளர்கள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்களன்று ரஷ்ய X-22 க்ரூஸ் ஏவுகணைகள் ஆம்ஸ்டர் வணிக வளாகத்தை தாக்கியதில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் 1,000 பேர் வரை தளத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
