உக்ரைனில் குடியிருப்பு கட்டிடம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் : 21 பேர் பலி
உக்ரைனின் ஒடேசா நகரத்தில் குடியிருப்பு கட்டிடம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று அதிகாலை உக்ரைனிய நகரமான மைகோலாய்வில் சக்திவாய்ந்த ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக மேயர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒடேசா நகரம் மீது தாக்குதல்
கருங்கடல் பகுதியில் உள்ள ஸ்னேக் தீவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறிய மறுநாளே ஏவுகணை தாக்குதலை ஒடேசா நகரம் மீது நடத்தப்பட்டுள்ளது.
இத் தாக்குதல் நடவடிக்கைக்கு முன்பு, ஒடேசாவின் முக்கிய ஏற்றுமதி துறைமுகத்தின் எல்லையான மைகோலேவ் பகுதி முழுவதும் வான்வழி தாக்குதல் சைரன்கள் ஒலித்தன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் மீது ரஷ்யா சமீபத்திய காலங்களில் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்திவருகின்றது.
அண்மையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்ய படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 7 வயது சிறுமி உட்பட 5 பேர் இடிபாடுகளில் சிக்கி பலத்த படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், போரின் காரணமாக இரு நாடுகளிலே பல உயிரிழப்புக்களும், சொத்து சேதங்களும் ஏற்பட்டு வருகின்றது.
மேலும், உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றிய ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி கொண்டே வருகிறது.
மறுபுறம் உக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி, நிதி உதவி அளித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.