செயற்பாட்டு அரசியலுக்கு விடை கொடுத்த மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார்.
இதனை அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
“தற்போது நான் எந்தவொரு கட்சியிலும் அங்கம் வகிக்கவில்லை. அரசியல் நடவடிக்கையில் பங்கேற்கவும் இல்லை. எவரேனும் நாட்டுக்கு நன்மை செய்தால் அது தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றேன்" என்றும் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
மீண்டும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு
மைத்திரிபால சிறிசேன சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக அரசியல் பயணத்தை முன்னெடுத்தவர்.
இவர் 2014 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்கி வெற்றி பெற்றவர்.

ஜனாதிபதியாகப் பதவி வகித்த பின்னரும் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.
அரகலயவின் பின்னர் அரசியல் ரீதியில் மைத்திரி அநாதையாக்கப்பட்டுள்ளார். கடந்த பொதுத்தேர்தலில் அவரது மகன் போட்டியிட்டிருந்தாலும் வெற்றி பெறவில்லை.
பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் இருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்திய இந்தியா News Lankasri