யாழில் தவிசாளர் நிரோஷ் வாகனத்தை பின் தொடரும் புலனாய்வாளர்கள்
எனது உத்தியோகபூர்வ வாகனத்தில் தற்போது பேசிக் கொண்டிருக்கும் சூழலில் கூட எனக்கு பின்னால் இரண்டு புலனாய்வாளர்கள் உள்ளனர். இன்று அரசாங்கம் சார்பாக கருத்து ஒன்றாகவும் செய்ற்பாடு இன்னொன்றாகக் காணப்படுகின்றது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலே மாறிமாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் அரசுக்கு எதிராக தமிழ் மக்கள் போராடக் கூடாது என்ற நிலையிலேயே உள்ளனர்.
இவர்கள் ஒரு நிலைத்தகு தீர்வுகளிலேயோ அல்லது சட்டம் ஒழுங்குகளிலேயோ மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு தயாரில்லை.
குறிப்பாக, அநுர அரசாங்கம் செயற்பாட்டிலேயே மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....