கட்டடங்களை ‘X’ குறியீட்டினால் அடையாளப்படுத்தி வெடிகுண்டுகளால் தகர்த்தெறியும் ரஷ்யா
உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 6 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரை, ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றது.
இந்நிலையில், பொதுமக்கள் வீட்டின் மாடிகளில் அடையாளங்கள் இடப்பட்டிருந்தால், அதை உடனடியாக அழித்துவிட வேண்டும் என உக்ரைன் நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உக்ரைனை நோக்கி 64 கி.மீட்டர் தூரத்திற்கு ரஷ்ய இராணுவ வாகனம் அணிவகுத்து நிற்கின்றது. இதனால் ரஷ்யா மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தும் என அஞ்சப்படுகின்றது.
இந்த நிலையில் கீவ் போன்ற நகரங்களில் உள்ள அடுக்குமாடி கட்டடங்களில் ‘X’ குறியீடு இடப்பட்டுள்ளது.
இந்த குறியீடு ரஷ்ய இராணுவத்தினரால் குறிக்கப்பட்டிருக்கலாம் எனவும், இந்த குறியீடு உள்ள இடங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்காக இப்படி செய்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும், குறியீடு இடப்பட்ட கட்டடங்களுக்கு கீழ் கியாஸ் பைப் லைன் செல்வதால், இதனை குறிவைத்து தாக்குவதற்காக கூட குறியீட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
எனவே , பொதுமக்கள் இதுபோன்ற குறியீட்டுகளை பார்த்தால் உடனடியாக அழித்துவிட வேண்டுமெனவும், அல்லது மறைத்து விட வேண்டும் எனவும் அதிகாரிகள் கீவ் நகரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்....
எதிரிகளை கொலை செய்வோருக்கு பரிசு - முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள உக்ரைன்
வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தும் ரஷ்யா! தரைமட்டமான உக்ரைனின் வரலாற்று சிறப்புமிக்க அரச கட்டடம்
உக்ரைனின் புதிய தாக்குதல் உத்தியால் திணறும் ரஷ்ய இராணுவம்
உக்கிரமடைந்த உக்ரைன் போர்க்களம்! ஐந்தாயிரம் ரஷ்ய படையினர் பலி - 200 பேர் கைது
you my like this video