தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு..! தகவலை மறைத்தாலும் குற்றம் - PSTAவின் கடும் விதிகள்
PTA சட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக அநுர அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள PSTA சட்டம் மிகவும் கடுமையானது என பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
குறிப்பாக, முன்னாள் அரசியல் தலைவர்களும் புதிய சட்டத்தின் விளைவுகளை இனிவரும் நாட்களில் பார்க்கலாம் எனக் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள PSTA சட்டத்தின் கீழ், ஒருவர் தனது தனிப்பட்ட உரிமைகளுக்காக அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்க முடியும். அதேவேளை, பயங்கரவாத குற்றங்கள் தொடர்பில் தகவல்கள் தெரியவரும் பட்சத்தில், அதனை பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும் என்றும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு கிடைத்த தகவல்களை அறிந்திருந்தும் அவற்றை பொலிஸாருக்கு தெரிவிக்காமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படலாம்.
அதேபோன்று, இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணுதல், அவ்வமைப்புகளுடன் கூட்டங்களை நடத்துதல் அல்லது அவற்றுக்கு ஆதரவளித்தல் போன்ற செயற்பாடுகளும் PSTA சட்டத்தின் கீழ் குற்றங்களாகக் கருதப்படுகின்றன.
இவ்வாறான நிலையில், அநுர அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள PSTA சட்டத்தின் கீழ் இலங்கையில் வாழும் ஒரு பிரஜை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் என்ன? பொலிஸார் கைது செய்ய வரும் சந்தர்ப்பத்தில் எவ்வாறான விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்?
இது தொடர்பான முக்கிய விடயங்களை இன்றைய “நியூஸ் இன்சைட்” நிகழ்ச்சியில் விரிவாகப் பார்க்கலாம்.