சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறியை அங்கீகரிக்க நீதிமன்றம் மறுப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தம்மை அங்கீகரிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த கோரிக்கையை மேல் மாகாண சிவில் மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று(28.9.2026) நிராகரித்துள்ளது.
துமிந்த திசாநாயக்க கட்சியின் பொதுச் செயலாளராகப் பணியாற்றுவதையும், நிமல் சிறிபால டி சில்வா தலைவராகச் செயல்படுவதையும் தடுக்கும் வகையில் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு தயாசிறி ஜயசேகர கோரியிருந்தார்.
இக்கோரிக்கையை முன்னதாகக் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில், அந்த உத்தரவுக்கு எதிராகத் தயாசிறி ஜயசேகர மேல் மாகாண சிவில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தார்.
விசாரணை
தயாசிறி ஜயசேகரவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக அங்கீகரிக்குமாறு கோரப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது.

நிமல் சிறிபால டி சில்வா தலைவராகவும், துமிந்த திசாநாயக்க பொதுச் செயலாளராகவும் தொடர்வதைத் தடுக்கும் வகையில் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கக் கோரிய மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இவ்வழக்கின் முதன்மை ஆரம்பக் கட்ட விசாரணை எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறும் என நீதிமன்றம் திகதி குறித்துள்ளது.