ஐக்கிய நாடுகள் சபையின் சீர்திருத்தங்களுக்கு இலங்கை ஆதரவு - விஜித ஹேரத் அறிவிப்பு
உலகில் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப ஐக்கிய நாடுகள் சபையை அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பதிலளிக்கக்கூடிய ஒரு அமைப்பாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் அர்த்தமுள்ள சீர்திருத்தங்களை இலங்கை ஆதரிக்கும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81வது அமர்வில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச சவால்களை எதிர்கொள்ளும் ஜ.நா
மேலும், ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு ஒரு இன்றியமையாத பங்காளியாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமகால உலகளாவிய யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அமைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், புதிதாக உருவாகும் சர்வதேச சவால்களை எதிர்கொள்வதில் அதன் நிறுவனங்கள் திறம்பட செயல்படுவதை உறுதி செய்வதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.