ரஷீத் கானின் அதிரடி ஆட்டத்தால் முதல் தோல்வியை சந்தித்த ராஜஸ்தான்
புதிய இணைப்பு
ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில், இறுதி பந்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது.
குறித்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதற்கமைய, ராஜஸ்தான் அணி நிர்ணியக்கப்பட்ட 20 ஓவர்களில் 197 என்ற இலக்கை குஜராத் அணிக்கு வழங்கியது.
அதனைத் தொடர்ந்து, துடுப்பெடுத்தாடிய குஜராத் அணிக்கு சாய் சுதர்ஷன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சிறந்த ஆரம்ப இணைப்பாட்டத்தை வழங்கினர்.
சாய் சுதர்ஷன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முறையே 35 மற்றும் 74 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் பிரகாசிக்கத் தவறினர்.
இறுதியில் ராகுல் தெவாட்டியா மற்றும் ரஷீத் கான் ஆகியோர் அதிரடியான இணைப்பாட்டத்தை வழங்க இறுதி பந்துக்கு 2 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
இந்நிலையில், ஆவேஷ் கான் வீசிய பந்துக்கு ரஷீத் கான் 4 ஓட்டங்களை பெற்று குஜராத் அணியை வெற்றிப் பாதையில் அழைத்து செல்ல ராஜஸ்தான் அணி தனது முதல் தோல்வியை சந்தித்தது.
அதேவேளை, புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி தொடர்ந்தும் முதலிடத்திலும் குஜராத் அணி ஆறாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
ஐபிஎல் (IPL) தொடரின் இன்றைய (10.04.2024) போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணிகள் மோதவுள்ள நிலையில், மழையின் காரணமாக போட்டி சிறிது நேரம் தாமதமாகியுள்ளது.
குறித்த போட்டியானது, ராஜஸ்தான் சவாய் மான்சிங் கிரிக்கெட் அரங்கில் நடைபெற்று வருகின்றது.
இந்திய நேரப்படி 7 மணியளவில் நாணயசுழற்சி செய்யப்படவிருந்த நிலையில், மழையின் காரணமாக 7.25 மணிக்கு நாணய சுழற்சி நடைபெற்றது.
நாணயசுழற்சி
அதற்கமைய, நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.
அதேவேளை, குஜராத் அணி ஒரு தோல்வியையேனும் சந்திக்காத நிலையில், புள்ளிபட்டியலில் 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும் குஜராத் அணி 2 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளுடன் 7ஆவது இடத்திலும் உள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |