விசேட தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மூதூரில் சுற்றிவளைப்பு
விசேட தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள தோப்பூர் பகுதிகளிலுள்ள வீடுகள் ,பொது இடங்கள் விசேட டெங்கு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.
இன்று புதன்கிழமை (03) காலை விசேட டெங்கு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முகைதீன் ஆலோசனைக்கு அமைவாக இன்று (03) இந்த டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, டெங்கு பரவும் வகையில் வீட்டுச் சூழலை வைத்திருந்த வீட்டுக்காணி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருந்தன.
சட்ட நடவடிக்கை
அத்தோடு தோப்பூர் போட்டா சந்தியில் பொதுமக்களால் இரவு வேளையில் யாருக்கும் தெரியாமல் குப்பைகள் கொட்டப்படுவதாக முறைப்பாடு அளிக்கப்பட்ட இடமும் இதன்போது பார்வையிடப்பட்டு பிரதேச சபை ஊழியர்கள்களைக் கொண்டு சுத்தப்படுத்தப்பட்டது.
இனிமேல் குப்பை கூலங்களை இவ்விடத்தில் போடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகளினால் முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






