மூன்றாவது நாளாக தொடரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம்
செம்மணியில் வலிந்து காணமால் ஆக்கபட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு சுழற்சி முறையில் நடை பெற்று வரும் உண்ணாவிரத போராட்டமானது நேற்றைய தினம்(28) மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையின் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம் மற்றும் தமிழின அழிப்பு வலிந்து காணமால் ஆக்கப்படுதல் மற்றும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித புதை குழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் எனும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

விஜயின் கரூர் பரப்புரையில் திடுக்கிடும் தகவல்கள் பல! அமைச்சர் அமித்ஷா அதிரடி!! கலக்கத்தில் தமிழக அரசு
உண்ணாவிரத போராட்டம்
இந்த உண்ணா விரத போராட்டத்தில் மன்னார் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் பொது மக்கள் இளைஞர்கள் மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டமானது எதிர்வரும் முதலாம் திகதி வரை மாவட்ட ரீதியில் தொடர்ந்து முன்னேடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



