கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணையைத் தோற்கடிப்போம் - அமைச்சர் ரோஹித திட்டவட்டம்
எதிரணியினரால் கொண்டுவரப்பட்டுள்ள வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் தோற்கடிப்போம் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாம் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் குறித்து அச்சப்படாத காரணத்தினால் தான், இன்று விவாதத்துக்கு இதனை எடுத்துள்ளோம்.
இன்று இதனைக் கொண்டுவந்துள்ள எதிர்த்தரப்பினர் தேவலோகத்தில் இருந்து இறங்கி வந்தவர்கள் போன்று தான் செயற்படுகிறார்கள்.
எரிபொருள் வாங்க, மக்களை நீண்ட வரிசையில் கடந்த காலத்தில் நிற்க வைத்த இந்த தரப்பினர் தான் இன்று எரிபொருள் விலையெற்றம் குறித்து பேசுகிறார்கள்.
இந்த நிலையில் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக இவர்களால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாம் வெற்றிகரமாகத் தோற்கடிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
