யாழ். வடமராட்சியில் வெள்ளை வானில் சென்று கொள்ளை
யாழ்ப்பாணம் - வடமாராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் வெள்ளை வானில் சென்ற சிலரால் நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து அவர்களை அச்சுறுத்தி வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும் பணம் என்பன எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்று (30.10.2023) இரவு 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கே டி எச் ரக ஹயஸ் வாகனத்தில் சென்றிருந்தவர்களால் பருத்தித்துறை பிரதேச சபையில் பணியாற்றிவரும் ஈஸ்வரன் என்பவரது வீட்டுக்குள் சென்று உங்களுடைய அடையாள ஆவணங்களை காண்பியுங்கள் என்று தெரிவித்து அவற்றை பார்வையிட்டதுடன் அவர்களது தொலைபேசிகளும் பறிக்கப்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர்
அவர்களுடைய அடையாள அட்டை என்பனவற்றை பார்வையிட்டுள்ளதுடன், அவர் காணி ஒன்றினை கொள்வனவு செய்வதற்காக வைத்திருந்த ஆவணங்கள் சோதிக்கப்பட்டுளதுடன் அந்த பையில் இருந்த அதற்குள் இருந்த ரூபாய் 5 லட்சம் பணம், மற்றும் ஆறரை பவுன் தங்க நகைகளும் வாகனத்தில் சென்ற இனந்தெரியாத நபர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.





தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri
