கிளிநொச்சி- கனகபுரம் பகுதியில் உள்ள வீதி புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் உள்ளூர் வீதிகள் புனரமைப்பின் இரண்டாம் கட்டத்தின் கீழ் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கனகபுரம் பாடசாலை பின்வீதி புனரமைப்பு பணி இன்று (14)ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த வீதி புனரமைப்பு பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கருணாந்தன் இளங்குமரன் ஆரம்பித்து வைத்தார்.
805மீற்றர் நீளமான குறித்த வீதி காப்பற் வீதியாக 45மில்லியன் செலவில் புனரமைக்கப்படவுள்ளது.
வீதி புனரமைப்பு
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், கரைச்சி பிரதேச செயலாளர்,வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிளிநொச்சி மாவட்ட பொறியியலாளர் ,கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், கடற்றொழில் அமைச்சரின் கிளிநொச்சி மாவட்ட இணைப்புச்செயலாளர் ,திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் ,பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 22 மணி நேரம் முன்

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
