சட்டவிரோத ஆட்சேர்ப்பு: சுரங்கப்பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை
இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அனுர வல்போலா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவரை தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்தது.
முன்னதாக, ஆட்சேர்ப்பு நடைமுறை குறித்து சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டிருந்தாலும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஒரு பணியாளரை வேலைக்கு அமர்த்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோத ஆட்சேர்ப்பு
இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டில் கே. துலானி அனுபமாவை புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் உதவி இயக்குநராக சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செய்ததாக அனுர வலபொல மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன் அலுவலக முகாமைக் குழுவின் ஒப்புதல் பெறாமலும், சம்பளம் மற்றும் பிற கொடுப்பனவுகள் உள்ளிட்ட நிதி சலுகைகளை வழங்காமலும் வல்பொல இந்த நியமனத்தை செய்ததாகக் கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |