முரண்பாடு இருந்தால் நீதிமன்றம் செல்லுங்கள்! உயிரை பணயம் வைக்க வேண்டாம் - அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
பயிற்சியை நிறைவு செய்த வைத்தியர்களுக்கான நியமன முறையை எதிர்த்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் எவ்வித அடிப்படையும் அற்றது என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
போர்க்களத்தில் களமிறக்கப்படும் அதி சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பு! ஈரானின் எச்சரிக்கையினால் மீண்டும் பதற்றம்
நியாயமான காரணங்களுக்கான வேலைநிறுத்தம்
நியாயமான காரணங்களுக்காக வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டால் அது குறித்து பேச்சு நடத்த முடியும். ஆனால், தற்போது முன்னெடுக்கப்படும் இந்த போராட்டமானது தேவையற்றது.

அமைச்சின் கொள்கைகளுடன் ஏதேனும் முரண்பாடுகள் இருப்பின், அப்பாவி நோயாளர்களின் உயிரைப் பணயம் வைக்காமல் அதனை நீதிமன்றம் ஊடாகத் தீர்த்துக் கொள்ளுமாறு வைத்திய சங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன்.
வைத்தியர்கள் அரச சேவையில் இணைந்துகொள்வதற்கான விண்ணப்பக் கால அவகாசம் இன்று சனிக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.இந்தக் கால அவகாசம் எக்காரணம் கொண்டும் மேலும் நீடிக்கப்பட மாட்டாது.
குறிப்பிட்ட நேரத்துக்குள் விண்ணப்பிக்கத் தவறிய வைத்தியர்களுக்கு, அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் வாய்ப்போ அல்லது அதற்கான ஊதியமோ வழங்கப்படமாட்டாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
நோயாளர்கள் பெரும் தவிப்பு
அமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பு மற்றும் வைத்தியர்களின் தொடர் பணிப்புறக்கணிப்பு காரணமாக, சுகாதாரத் துறையில் நிலவும் நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது.
இதனால் அரச வைத்தியசாலைகளுக்குச் சிகிச்சைக்கு வரும் நோயாளர்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை,நியாயமற்ற இடமாற்ற முறையைக் கண்டித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 8 மணி முதல் ஆரம்பமான இந்தப் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளின் சேவைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
போராட்டம் தொடரும்
இந்நிலையில், தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காத காரணத்தால், போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கச் சங்கம் முடிவு செய்துள்ளது.
எமது நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் இணக்கப்பாடு எட்டப்படாததால் போராட்டத்தைத் தொடர தீர்மானித்துள்ளோம். எமது அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகள் மற்றும் போராட்டத்தின் வீச்சு குறித்து நாளை கூடவுள்ள சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்" என்று சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகந்ததாச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மிக நெருக்கமான உச்சத்தால் தீவிர நிலை: தயவு செய்து அவதானமாக இருக்கவும் - பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 20 மணி நேரம் முன்
போர்க்களத்தில் களமிறக்கப்படும் அதி சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பு! ஈரானின் எச்சரிக்கையினால் மீண்டும் பதற்றம்
மிக நெருக்கமான உச்சத்தால் தீவிர நிலை: தயவு செய்து அவதானமாக இருக்கவும் - பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
பிராந்திய ரீதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் தாக்குதல்கள் - குவைத்தில் முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல்
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
வெளிவரப்போகும் குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ, எப்படி தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam