பாதாள உலக அச்சுறுத்தலுக்கு மத்தியில் அநுர அரசு எடுத்த அதிரடி தீர்மானம்
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு கூட்டங்கள் மற்றும் சம்மேளனங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து ஒரு அவசரமான ஊடக சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.
அதேவேளை தேரர்களுடைய சங்க சம்மேளனம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இந்த சங்க சம்மேளனமானது ஐக்கிய தேசிய கட்சியின் முகநூல் பக்கத்தில் நேரலையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறெனில் இந்த சங்க சம்மேளனத்தின் பின்னணியிலும் ஒரு அரசியல் தலையீடு காணப்படுவதுடன் தற்போதைய அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த சம்மேளனம் செயற்படுவது புலனாகிறது.
இது இவ்வாறு இருக்க தெவிநுவர - உற்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் 769 ஆவது எசல மகா பெரஹரவிற்கு பாதாள உலகத்தினரிடமிருந்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்படலாம் எனும் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் காவடி நடனத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கான ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாங்கமானது ஒரு காவடி நடனத்தைக் கூட உரிய பாதுகாப்புடன் நடத்த முடியாது என்று கூறுவதிலிருந்து இது எப்படிப்பட்ட ஒரு அரசாங்கம் இருக்கும் என்றொரு கேள்வி எழுவதாக நாமல் ராஜபக்ச தனது மேடைப் பேச்சொன்றில் தெரிவித்திருந்தார்.
இந்த விடயங்கள் குறித்து மேலதிக விபரங்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியின் ஊடாக விரிவாக பார்க்கலாம்..