போர்க்களத்தில் களமிறக்கப்படும் அதி சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பு! ஈரானின் எச்சரிக்கையினால் மீண்டும் பதற்றம்
அமெரிக்க போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து தங்களது வான்வெளியை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்போவதாக ஈரான் சபதம் செய்துள்ளது.
இதற்காக அதி நவீன மற்றும் சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை போர்க்களத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
48 மணி நேர கால அவகாசம்
உடன்பாட்டிற்கு வர 48 மணி நேர கால அவகாசம் ஈரானுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்றையதினம் அறிவித்ததினை அடுத்து ஈரான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

விமானங்களைத் தாக்குவதற்காக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தங்கள் நாடு அறிமுகப்படுத்தி வருவதாக ஈரானிய இராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
முக்கிய பேச்சுவார்த்தை
இதேவேளை, சனிக்கிழமை தென்மேற்கு ஈரானில் உள்ள ஒரு அணுமின் நிலையத்திற்கு அருகே ஏவுகனை ஒன்று தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
இதேவேளை, ஈரானுடனான சாத்தியமான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பேச்சுவார்த்தையாளராகப் பணியாற்ற வேண்டும் என்ற அமெரிக்காவின் அழுத்தத்தை கத்தார் எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri