எரிபொருள் நெருக்கடி! அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்
சிங்களப் புத்தாண்டுப் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய அரசாங்க ஊழியர்களை மட்டும் பணிக்கு அழைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதற்ற சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மற்றும் சவால்களுக்கு மத்தியில் அரசாங்க சேவையை தொடர நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழு, வீட்டிலிருந்தே இணையவழியில் பணியாற்ற அனுமதிப்பதன் மூலம் எரிபொருள் மற்றும் ஆற்றலைச் சேமிக்க முடிவு செய்துள்ளது.
சிறப்பு முறையை அறிமுகப்படுத்துவதிலும் கவனம்
மேலும், அடுத்த 7 மற்றும் 9 ஆம் திகதிகளில் பாடசாலை மட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை முடிந்தவரை இணையவழியில் நடத்துவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் நீதி உள்ளிட்ட அமைச்சகங்களில் அத்தியாவசிய ஊழியர்களை மட்டும் பணிக்கு அழைத்து சேவைகளை தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தினசரி அரசாங்க ஊழியர்களின் வருகைப் பதிவைக் கண்காணிக்க ஒரு சிறப்பு முறையை அறிமுகப்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 23 மணி நேரம் முன்
ரூ. 4000 கோடி பட்ஜெட் இராமாயணம் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் வாங்கும் சம்பளம்... இத்தனை கோடியா, அடேங்கப்பா... Cineulagam
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri