அதிகரிக்கும் போர்ச் செலவுகள் : நிதி இடைவெளியை நிரப்பப் திணறும் உக்ரைன்
ரஷ்யாவுடனான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், நடப்பாண்டிற்கான போர்ச் செலவுகள் 155 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாகவும், அதில் ஏற்பட்டுள்ள 27 பில்லியன் டொலர் நிதி இடைவெளியை நிரப்ப அரசாங்கம் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் உக்ரைன் பிரதமர் செர்கி கொரெட்ஸ்கி தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டின் முற்பகுதியில் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இந்த நிதி இடைவெளியை நிரப்புவது அவசியமாகும்.
அக்டோபர் 15 ஆம் திகதிக்குள்
இதில் 7 பில்லியன் டொலர்களை அரச செலவினங்களைக் குறைப்பதன் மூலமும், ஏனைய 20 பில்லியன் டொலர்களை சர்வதேசக் பங்காளிகளின் உதவிகள் மூலமும் திரட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சீர்திருத்த நிபந்தனைகளை அக்டோபர் 15 ஆம் திகதிக்குள் நிறைவேற்றத் தவறினால், உக்ரைனுக்கு கிடைக்கவிருக்கும் 29.5 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவிகள் கைநழுவிப்போகும் அபாயம் உள்ளதாகவும் பிரதமர் எச்சரித்துள்ளார்.
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri