அக்குரேகொட இரட்டைக்கொலை விவகாரம்! சிஐடியினரின் விசாரணையில் சிக்கிய அரச அதிகாரி
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிக்கு உதவிய கிராம அலுவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிதாரிக்கு போலி அடையாள அட்டை வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அத்தனகல்ல, மீவல பகுதியைச் சேர்ந்த கிராம அலுவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர், நிட்டம்புவவில் உள்ள யட்டியான பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலி அடையாள அட்டை வழங்கிய விவகாரம்
சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியின் கொலை தொடர்பாக குற்றப்பிரிவு நடத்திய விசாரணையின்படி, ரூபன் சுரேஷ் என்ற பெயரில் போலி புகைப்படத்தைப் பயன்படுத்தி போலி அடையாள அட்டை வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கிராம அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட உள்ளார்.
அக்குரேகொடவில் கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவியும் அக்குரேகொடவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, இரண்டு பாதாள உலகக்கொலையாளிகளால் சுட்டுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
you may like this..