இலங்கையில் அதிகரிக்கும் வெப்பம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையின் (Sri Lanka) வடக்கு, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு ஆகிய மாகாணங்களிலும் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் வெப்பச் சுட்டெண் அதிகரிக்கும் என வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வெப்ப அதிகரிப்பு, சாத்தியமான உடல்நல அபாயங்களை ஏற்படுத்துவதோடு வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் இதில் பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ளனர்.
எனவே, மக்கள் நீரேற்றத்துக்கு முன்னுரிமை அளிக்கவும், வெப்பம் தொடர்பான நோய்களைத் தடுக்க நிழலான பகுதிகளில் அடிக்கடி ஓய்வு எடுக்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஐரோப்பிய காலநிலை மையம்
முன்னதாக, ஐரோப்பிய காலநிலை மையத்தின் தகவல்களின்படி, கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையில் கடுமையான வெப்பநிலை பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
