நியூசிலாந்து அணிக்காக போலி பெயரில் விளையாடிய இந்திய வீரர் ரிஷப் பந்த்

New Zealand Rishabh Pant Indian Cricket Team
By Amal Nov 28, 2026 07:57 PM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரர் ரிஷப் பந்த், நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றில் போலிப் பெயரில் விளையாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, கிறைஸ்ட்சர்ச்சில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

போலிப் பெயரில் பதிவு

ரிஷப் பந்த், கடந்த புதன்கிழமை ஹாக்லி பார்க் மைதானத்தில் நடைபெற்ற Last Man Stands எனப்படும் சமூக கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார்.

நியூசிலாந்து அணிக்காக போலி பெயரில் விளையாடிய இந்திய வீரர் ரிஷப் பந்த் | Rishabh Pant Played New Zealand Under Fake Name

இதில், Open House Swingers அணிக்காக விளையாடிய அவர், போட்டியின் பதிவுப்புத்தகத்தில் ‘Stan Stan’ என்ற போலிப் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தார். இந்த போட்டியில் அவர் வெறும் 21 பந்துகளில் அதிரடியாக 54 ஓட்டங்களைக் குவித்தார். அவரது அதிரடி ஆட்டத்தில் பல சிக்ஸர்களும்(6 ஓட்டங்கள்) அடங்கியிருந்தன.

இறுதியாக, அவர் விளையாடிய Open House Swingers அணி 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. முன்னதாக Open House Swingers அணியின் வீரர் முகமது சஃபி, கிறைஸ்ட்சேர்ச்சின் மத்திய பகுதியில் மின்சார சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ரிஷப் பந்தை தற்செயலாகச் சந்தித்துள்ளார்.

அப்போது அவருடன் உரையாடி, புகைப்படங்களும் எடுத்துக்கொண்ட சஃபி, தங்களது அணிக்காக விளையாட முடியுமா எனக் கேட்டுள்ளார். அதற்கு ரிஷப் பந்தும் சம்மதம் தெரிவித்து, போட்டியில் களமிறங்கியுள்ளார்.

வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது

மேலும், அந்தப் போட்டியில் தனது உறவினரின் கிரிக்கெட் மட்டையையே ரிஷப் பந்த் பயன்படுத்தியதாக சஃபி தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்காக போலி பெயரில் விளையாடிய இந்திய வீரர் ரிஷப் பந்த் | Rishabh Pant Played New Zealand Under Fake Name

இந்தச் செய்தியைக் கேட்டு மிகவும் ஆச்சரியமடைந்ததாக, இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணியின் தலைவர் டொம்ம லாதமும் ரிஷப் பந்தின் இந்தச் செயலைப் பாராட்டியுள்ளார்.

கடந்த வாரம் வெலிங்டனில் நடைபெற்ற, நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் 153 பந்துகளில் 128 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

அந்தப் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இந்த நிலையில்,இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று நவம்பர் 28ஆம் திகதி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகிறது.

ஐரோப்பிய நாடொன்றில் பெருந்தொகை யூரோவுடன் சிக்கிய இலங்கையர் - விசாரணையில் அம்பலமான ரகசியம்

ஐரோப்பிய நாடொன்றில் பெருந்தொகை யூரோவுடன் சிக்கிய இலங்கையர் - விசாரணையில் அம்பலமான ரகசியம்

மாவீரர் நாள் வளைவு விவகாரம் : தவிசாளரிடம் பொலிஸார் தீவிர விசாரணை

மாவீரர் நாள் வளைவு விவகாரம் : தவிசாளரிடம் பொலிஸார் தீவிர விசாரணை

மரண அறிவித்தல்

சுழிபுரம், Hamburg, Germany

26 Nov, 2026
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Brampton, Canada

25 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கரவெட்டி

29 Nov, 2016
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்

25 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

28 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கொக்குவில்

29 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, காங்கேசன்துறை, கொழும்பு சொய்சாபுரம்

26 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

27 Nov, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
41ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

28 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
51ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US