தகவல் அறியும் உரிமை ஆணையகம் தொடர்பில் ஜனாதிபதிக்கு சென்ற கோரிக்கை
தகவல் அறியும் உரிமை ஆணையகத்தின் நிறுவன ஒருமைப்பாட்டை பாதிக்கும் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு, ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது.
எஸ்.எல்.பி.ஐ என்ற இலங்கை செய்தித்தாள் நிறுவகம் மற்றும் அதன் உறுப்பு அமைப்புக்களான இலங்கை செய்தித்தாள் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம், முஸ்லிம் ஊடக மன்றம், தமிழ் ஊடக கூட்டணி, ஊடக தொழிற்சங்க ஊழியர்களின் கூட்டமைப்பு மற்றும் தெற்காசிய ஊடக கூட்டணி கூட்டமைப்பு ஆகியவை இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.
கோரிக்கை
2025 மார்ச் 4 ஆம் திகதியன்று வெற்றிடமான, தகவல் அறியும் உரிமை ஆணையகத்தின் தவிசாளர் நிலை இன்னும் நிரப்பப்படவில்லை என்பதை இந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அத்துடன், ஆணையகத்துக்கு தேவையான அத்தியாவசிய சட்ட பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஒப்புதல் அளிப்பதில் அரசாங்கம் தாமதப்படுத்துவது தொடர்பாகவும் குறித்த அமைப்புக்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன.
ஆணையகத்துக்கென, சுயாதீன நிதி வழங்கப்பட வேண்டும் என்றும் அது பாதீட்டில் இருந்து ஒதுக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை செய்தித்தாள் நிறுவகம் உட்பட்ட அமைப்புக்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளன.





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 21 மணி நேரம் முன்

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
