ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கைது!
இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டியவில்(Embilipitiya) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போது ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் ஏ.கே 47 ரக துப்பாக்கி, மேலும் பல துப்பாக்கிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சுற்றிவளைப்பானது நேற்று(05.11.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கொத்தலாவல சந்திக்கு அருகில் விசேட அதிரடிப்படையினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
ஆரம்ப விசாரணை
மேலும் அவர்களிடம் இருந்து 7.62 மில்லிமீட்டர் ரவைகள் 25, 9 மில்லிமீட்டர் ரவைகள் 7 ஏ.கே.47 ரக துப்பாக்கி, இரண்டு வாள்கள் மற்றும் கத்தி ஆகியவை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய குறித்த சந்தேகநபர், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 'போடி லஸ்ஸி' என்ற பாதாள உலக நபரின் நெருங்கிய சகா என ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இஸ்ரேல் ஏடன் வளைகுடாவில் திறந்துள்ள மூலோபாயம் முன்னரங்கு 16 மணி நேரம் முன்
Viral Video: வானில் மீனுடன் பறந்த கழுகுக்கு நேர்ந்த துயரம்... பெலிகான் பறவையின் மோசமான செயல் Manithan